அமெரிக்காவில் 2 டோஸ் மற்றும் பூஸ்டர் போட்டவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி

0 2594

அமெரிக்காவில் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு மட்டுமின்றி பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் 22 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  43 பேரிடம் நடத்திய ஆய்வில் 34 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்றும் அவர்களில் 14 பேர் பூஸ்டர் டோசும் போட்டவர்கள் என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் பாதித்தவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் இந்த வார கொரோனா தொற்று 40 சதவிகிதம் அதிகரித்து நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரமாக பதிவாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments