வெறிநாய் கடித்ததால் ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்த காளை மாடு முட்டியதில் ஒரு மூதாட்டி பலி.!

0 2381

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வெறிநாய் கடித்ததால் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்ததாக கூறப்படும் காளை மாடு முட்டியதில், மூன்று மூதாட்டிகள் படுகாயமடைந்த நிலையில், ஒரு மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்ற இரண்டு மூதாட்டிகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைலாசநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்  நேற்று அந்த பகுதியில் இருந்த கோவில் காளையை கடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், காளைக்கு வெறிப்பிடித்ததாக சொல்லப்படும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 3 மூதாட்டிகளை காளை அடுத்தடுத்து முட்டித் தாக்கியது. இதையடுத்து, காளையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த கால்நடை மருத்துவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு காளை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments