தலையில் குப்பைத் தொட்டியை கவிழ்த்து ஆசிரியரை தரக்குறைவாக நடத்திய 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

0 4674

கர்நாடக மாநிலம் தேவனகெரெவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் தலையில் குப்பை தொட்டியை கவிழ்த்து தரக்குறைவாக நடத்தியதாக கூறப்படும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய பிரகாஷ் என்ற அந்த ஆசிரியரை கிண்டலும் கேலியும் செய்த சில மாணவர்கள், அவரது ஆடையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை சக மாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில், பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து, அம்மாவட்ட கல்வி துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், 4 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments