திருவாரூர் வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.23 லட்சம் பணம் பறிமுதல்..!

0 1252

திருவாரூர் அருகே, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வலங்கைமான் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு எண்ணெய் விதைகளை மானிய விலையில் வழங்குவதற்கு, அதிகாரிகள் துணையுடன் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் மொத்தம் 23 லட்சத்து 14 ஆயிரத்து 750 ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments