வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 24852

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், திங்கட்கிழமை அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments