கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி நகைக்கடன் முறைகேடு - 2 பேர் சஸ்பென்ட்..!

0 10247

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில், ஒரு கோடி ரூபாய் நகைக்கடன் முறைகேடு புகாரில், வங்கி செயலாளர் மற்றும் மேற்பார்வையாளர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7-ம் தேதி, இந்த வங்கியில் மண்டல ஆய்வு குழு ஆய்வு மேற்கொண்டபோது, 102  நகை பொட்டலங்களில் நகைகள் இல்லாமலேயே கடன் கொடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த கடன்கள், அதே வங்கி பணியாளர்களது உறவினர்கள் மற்றும் நிர்வாக குழுவினரின் உறவினர்கள் பெயரில் வழங்கப்பட்டுள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக வங்கி செயலாளர் நீலகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தத் தொகையும் கடும் நடவடிக்கை மூலம் அவர்களிடம் இருந்து முழுவதுமாக வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments