பறவைக் காய்ச்சல் எதிரொலி - கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

0 1818

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

அதே போல, பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments