கிருஷ்ணா ஆற்றில் நீராட சென்று விபரீதம்... 5 மாணவர்களுடன் மூழ்கி ஆசிரியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

0 1281

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள மாடிப்படு கிராமத்தில் வேத பாட சாலையைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரு ஆசிரியர் உள்பட ஆறு பேர் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

வேத பாடசாலையின் ஆசிரியருடன் மாலையில் கிருஷ்ணா நதியில் நீராட மாணவர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு புதை குழியில் அவர்கள் விழுந்து விட்டதாகவும் நீச்சல் தெரியாததால் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீச்சல் தெரிந்த ஒரேயொரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினார். மீனவர்களின் உதவியுடன் ஆசிரியர் மற்றும் 5 மாணவர்களின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments