விஜய், தனுஷ் தெலுங்கில் நடித்தால் வரவேற்பேன் - ஜூனியர் என்.டி.ஆர்.

0 5256

டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட் நடிகர் அஜெய் தேவ்கான், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் நடந்த வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ராஜமவுலி, சென்னைக்கு வரும்போது பள்ளி மாணவனாக உணருகிறேன் என்றார். இந்தியாவிலே அதிகளவில் நடிகர்கள் இருப்பதால் அவர்களை வைத்து படம் இயக்க விரும்புவதாகவும், அதனால் ஹாலிவுட் நடிகர்களை வைத்து படம் இயக்க விருப்பமில்லை என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம்சரண் மீண்டும், தான் பிறந்த இடமான சென்னைக்கு வருவது தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களை நினைவு படுத்துவதாக கூறினார். தமிழ் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தெலுங்கு படங்களில் நடித்தால் முதல் ஆளாய் வரவேற்பேன் என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments