முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியிடம் பண மோசடி

0 4042

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஆட்டக்காரரான வினோத் காம்பிளியைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவருடைய வங்கிக் கணக்கின் கேஒய்சி ஆவணத்தை ’அப்டேட்’ செய்வதாகக் கூறி வங்கி விவரங்களையும் ஏடிஎம் எண்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

பின்னர் காம்பளிக்குத் தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து  ஒரு லட்சத்து 14ஆயிரம் ரூபாயினை திருடி உள்ளார். இதனை அடுத்து  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வினோத் காம்பிளி இந்த மோசடி தொடர்பாக மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments