சிலி - காட்டுத் தீயில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

0 1451

சிலியில் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ 120-க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்தது.

Chiloe தீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன. தீ விபத்து மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை மீட்க போராடிய மக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமடைந்தனர்.

கடும் போராட்டங்களுக்கு மத்தியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்வாசிகளாக மாறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments