மெக்சிகோவில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

0 1705

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கவுதமாலா, டொமினிக்கன் குடியரசு, ஹோண்டுராஸ், ஈகுவடார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 160-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க எல்லையை அடைய முயன்றதாக கூறப்படும் கண்டெய்னர் லாரி, மெக்சிகோவின் Chiapas மாகாணத்தில் அபாயகரமான வளைவை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 55 பேர் உயிரிழந்ததாகவும், 105 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் மெக்சிகோ ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments