விவசாயிகளுக்கான நீர் ஆதார திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

0 1679

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்புரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். சரயு நஹார் தேசியத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த மத்திய அரசின் திட்டங்களை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் மோடி  பல்ராம்புரில் சரயு நஹார் தேசிய திட்டத்தை இன்று பிற்பகல் 1 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டம் 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போதும் முந்தைய அரசுகளால் போதிய அளவு நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு சுமார் 4800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதால் 40 ஆண்டுகளுக்குப்பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இத்திட்டம் சரயு நதியுடன் 4 நதிகளின்  நீரை இணைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் மூலம் உத்தரப்பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 14 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் 29 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments