இருசக்கரவாகனத்தில் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை தலைநசுங்கி பலி

0 2723
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் இருசக்கரவாகனத்தில் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை தலைநசுங்கி பலியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் இருசக்கரவாகனத்தில் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை தலைநசுங்கி பலியாகியுள்ளது.

பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தாத்தாவும் பாட்டியும் பேரன் அன்புச்செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் முதியவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, முன்னே அமர்ந்து வந்த குழந்தை அன்புச்செல்வன் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளான்.

லாரி ஓட்டிவந்த வெளிமாநில ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்துள்ள இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments