வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட ஆரோவின் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை..!

வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் அமைந்திருக்கும் சர்வதேச நகரமான ஆரோவில்லில், தியான மண்டபத்தைச் சுற்றி சாலை அமைப்பதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மரங்கள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்ததோடு, தமிழக அரசும், ஆரோவில் அறக்கட்டளையும் பதில் சொல்ல உத்தரவிட்டு, விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Comments