டெல்லியில் காற்று மாசானது தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் காற்றின் தர ஆராய்ச்சி அமைப்பு தகவல்.!

0 1987

டெல்லி மாநகரில் காற்று மாசானது தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் காற்றின் தர ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

காற்றின் தரக்குறீயிட்டு எண் 100 ஆக இருக்கும் வரையில் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், உடல்நலனுக்கு மிகவும் தீங்கான வகையில் டெல்லி மாநகரின் தரக் குறியீட்டு எண் 293 ஆக  பதிவாகியுள்ளது.

மாநகரை ஒட்டியுள்ள நொய்டாவில் காற்றின் தரக்குறியீட்டு எண் 306 ஆக அதிகரித்து, காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. குருகிராம் பகுதியிலும் காற்றின் தரம் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.

காற்றின் மாசு வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லி மாநகரவாசிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments