ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக இளைஞர் ஒருவர் கைது.!

0 4085

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக தேவையற்ற யூகங்களையும் கருத்துகளையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழகக் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த பண்டார பரம்பு பகுதியைச் சேர்ந்த ஷிபிந்த் என்ற 24 வயது இளைஞர் தனது ட்வீட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments