“டைமிங் தகராறு”- தனியார் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துனர்கள் தாக்கிக் கொண்ட காட்சிகள்!

0 2293
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துனர்கள் சண்டையிட்டு தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துனர்கள் சண்டையிட்டு தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும் நிலையில், தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இடையே அடிக்கடி டைமிங் தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் "டைமிங் தகராறு" காரணமாக ஒரு தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இணைந்து மற்றொரு தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி சண்டையிட்டுக் கொண்டனர்.

இச்சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments