சென்னையில் இரண்டரை ஹெக்டேர் பரப்பளவில் 20கோடி ரூபாய் மதிப்புள்ள பூங்காவை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

0 2492

சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் இரண்டரை ஹெக்டேர் பரப்பளவில் 20கோடி ரூபாய் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்த சதுப்பு நிலப் பகுதியில் சுமார் 2லட்சத்து65ஆயிரத்து313 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இச்சதுப்பு நிலத்தை பாதுகாத்திடவும், அங்கு இருக்கும் பறவைகள், தாவரங்கள், விலங்கினங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments