அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்து, கை நழுவி கீழே விழுந்த மாணவன்!

0 12092

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன் ஒருவன் திடீரென கை நழுவி கீழே விழுந்த நிலையில், அந்த மாணவன் நூலிழையில் உயிர் தப்பினான்.

தொரப்பாடியில் உள்ள தந்தைப் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியைச் மாணவர்கள் சிலர் கல்லூரி முடிந்து, காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி ஜன்னல் கம்பியை பிடித்தப்படி படிகளிலும் தொங்கிய படி பயணித்தனர். பேருந்து கல்லூரியைத் தாண்டி சிறிது தூரம் சென்றவுடனேயே தொங்கியபடி பயணித்த மாணவன் ஒருவன், திடீரென கை நழுவி சாலையில் விழுந்தான்.

அச்சமயம், பேருந்தின் பின்னால் பெரிய வாகனங்கள் ஏதும் வராததால் மாணவன் உயிர் தப்பினான். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், இதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments