சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் வண்டிகள் சரியான நேரத்திற்கு வருகிறதா என்பதை பார்க்க ஆன்லைன் சேவை தொடக்கம்.!

0 2963

திடக்கழிவு மேளாண்மையில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் வண்டிகள் சரியான நேரத்திற்கு வருகிறதா என்பதை பார்க்க ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

குப்பை அள்ளும் வண்டிகள் உரிய நேரத்தில் வரவில்லையெனில் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்குமான குப்பை அள்ளும் வண்டிகளின் வழித்தடம் மற்றும் குப்பை அள்ளும் நேரம் குறித்த வரைப்படம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் குப்பை அகற்றப்படவில்லை என்றால் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments