கடலூரில் பேக்கரி முன் நின்ற இரு சக்கர வாகனத்தில் இருந்து 6 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சி.!

0 10120

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பேக்கரி முன் நின்ற இரு சக்கர வாகனத்தில் இருந்து 6 லட்ச ரூபாயை திருடிச் சென்றதாக மர்ம நபர்களை சிசிடிவி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

ரெட்டி பாளையத்தை சேர்ந்த பங்காரு சாமி வங்கியில் இருந்து எடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை தன் டூவீலரில் வைத்துவிட்டு பேக்கரி வரை சென்றதாகவும், இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பங்காரு சாமி அளித்த புகாரில் சிசிடிவியில் முகக் கவசம் அணிந்தபடி தோன்றிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments