பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரை பலி கொண்ட விபத்து சதிவேலையா? விசாரணை தீவிரம்

0 2950

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மதுலிகா, மற்றும் 11 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்தது, அதில் சதிவேலை ஏதும் உள்ளதா என்பது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

சூலூர் விமான நிலையத்தில் இருந்து குன்னூர் வெளிங்டன் ராணுவ மையத்துக்கு தமது மனைவி மற்றும் சக அதிகாரிகளுடன் ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் பலியாகினர்.

நாட்டையே உலுக்கிவிட்ட இந்த துயர சம்பவத்தின் விசாரணை விமானப் படைத் தளபதி மார்ஷல் மன்வேந்தர சிங்கின் தலைமையில் நடைபெற்று வருகிறது. முப்படைத் தளபதிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 11.48 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 12.15 மணிக்கு வெலிங்டனை அடைய இருந்த நிலையில் 12.08 மணிக்கு ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாகவும் மிகவும் தாழ்வாகப் பறந்ததால் மூடு பனி மூடிய நிலையில் பனை மரத்தில் மோதி விழுந்ததாகவும் பல்வேறு வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விபத்தில் சதி வேலை ஏதும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சம்பவ இடத்தில் முப்படை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து விபத்து நடைபெற்றது எப்படி என்ற விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் . ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான முக்கியமான ஆதாரமாகவும் அது கருதப்படுகிறது. ஹெலிகாப்டர் உள்ளே குண்டு வெடித்ததா என்று அறிய விமானத்தின் சிதறிய உதிரிகளை சேகரித்து ரசாயன பரிசோதனைகள்  மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விபத்து குறித்து வெளியான சில வீடியோ காட்சிகளையும் தீவிரமாக ஆராய்ந்து விபத்துக்கான காட்சிகளை கோர்த்து அறிந்துக் கொள்ள  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments