திருப்பதி: ஏடிஎம்மில் தொழில்நுட்ப கோளாறு செய்து ரூ.6 லட்சம் பணமோசடி... 2பேர் கைது

0 1445

திருப்பதியில் உள்ள ஏடிஎம்மில் தொழில்நுட்ப கோளாறு செய்து வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமானுஜர் சர்க்கிள் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த 2 இளைஞர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

பணம் எடுத்தவுடன் மின்சாரத்தை வரவழைத்து, ஏடிஎம்மில் தங்கள் கார்டுக்கு பணம் வரவில்லை வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட திருப்பதி போலீசார், பேருந்து நிலையத்தில் உள்ள ஏடிஎம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 2பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இவர்கள் தான் ஏடிஎம்மில் தொழில் நுட்ப கோளாறு செய்து பணத்தை மோசடி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 99 ஏடிஎம் கார்டுகள், 2 செல்போன்கள், 60 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.மோசடி தொடர்பாக 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments