இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தேவையா ? மருத்துவ நிபுணர்க் குழு இன்று ஆலோசனை

0 2544

இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தேவையா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்க் குழு இன்று கூடுகிறது.

அண்மையில் சீரம் இந்தியா நிறுவனம் மூன்றாவது பூஸ்டர் டோஸாக கோவிஷீல்டை செலுத்துவதற்கு அவசர கால அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. கோடிக்கணக்கில் கோவிட் தடுப்பூசிகள் கைவசம் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிடப்படுகிறது.

ஒமிக்ரான் பரவலைத் தடுக்கவும் உடல் நல பாதிப்புடையோர், முதியோரை பாதுகாக்கவும் பூஸ்டர் டோஸ் அவசியம் என்று கருதப்படுகிறது. பல்வேறு நாடுகள் அதற்கு அனுமதியளித்துள்ள போதும் கூடுதலான விவரங்கள் கேட்டு மத்திய அரசு பூஸ்டர் டோஸ் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.இன்று நடைபெறும் நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தையடுத்து விரைவில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments