வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர் ஆணையம் புதிய ஒப்பந்தம்

0 587

வெள்ள அபாயம் பற்றி 3 நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர் ஆணையம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. வெள்ள அபாயம் குறித்து, தற்போது ஒரு நாளைக்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ள அபாயத்தை 3 நாட்களுக்கு முன்னரே கண்டறிந்து, எச்சரிக்கும் வகையில், மத்திய நீர் ஆணையம் கூகுள் நிறுவனத்துன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை கூகுள் நிறுவனம் வழங்கயிருக்கிறது. இந்தாண்டு சோதனை அடிப்படையில் இந்த கணிப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments