லிவிங் டுகெதர் காதலனை கொல்ல ஆசிட் வீசிய காதலி..! சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!

0 5210
மும்பையின் கேட்வே ஆப் இந்தியா அருகே கடற்படை தினம் கொண்டாடப்பட்டது.

துபாயில் காதலில் வீழ்த்திய பெண்ணை ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது ஆத்திரம் அடைந்த காதலி ஆசிட் வீசிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கழற்றி விட்ட காதலனை கொல்ல பெண் மேற்கொண்ட விபரீத முயற்சிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீவாரி சர்வீஸ் அப்பார்ட் மெண்டில் காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் அடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசியதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பீளமேடு காவல் ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்த போது காதலனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சம்பந்தப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கன்னத்தில் லேசான காயத்துடன் அங்கு நின்றிருந்த காதலன் ராகேஷை பிடித்து விசாரித்த போது, லிவிங் டுகெதர் பிரேக்கப்பால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

துபாயில் உள்ள மசாஜ் செண்டரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 27 வயது பெண்ணும், திருவனந்தபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ராக்கேஷ் என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, தனியாக அறை எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அந்தப்பெண் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், தாமதமாக ஊருக்கு திரும்பிய ராக்கேஷ் , இங்கு வந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

ராக்கேஷ், தனக்கு திருமணமானதை மறைத்து காதலியுடன் செல்போனில் பேசிவந்த நிலையில், அண்மையில் ராகேஷின் மனைவி மூலமே திருமணம் ஆனதை காதலி அறிந்து கொண்டுள்ளார். காதலியுடன், தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்கள் அவரது செல்போனில் இருந்ததால் அதனை கைப்பற்றி அழிக்க திட்டமிட்ட ராகேஷ், சம்பவத்தன்று கோவை, பீளமேட்டில் உள்ள ஸ்ரீவாரி அடுக்குமாடு குடியிருப்பில் உள்ள சர்வீஸ் அப்பார்ட் மெண்டில் ஒரு நாள் வாடகைக்கு தங்கிக்கொண்டு தனது காதலியை அங்கு வரவழைத்துள்ளான்.

தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கும் நோக்கத்துடன் கோவைக்கு சென்ற காதலி, கையோடு ஆசிட் மற்றும் கத்தியை எடுத்துச் சென்றுள்ளார். தனிமையில் இருக்கும் போது, காதலியின் செல்போனில் இருந்த முக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராக்கேஷ் அழித்ததாக கூறப்படுகின்றது.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த காதலி, தன்னை ஏமாற்றிவிட்டு, ஆதாரங்ளையும் அழிக்க பார்க்கிறாயா ? என்க்கேட்டு காதலன் மீது ஆசிட்டை வீசியுள்ளார், ராகேஷ் குனிந்து கொண்டதால் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கத்தியை எடுத்து காதலனை குத்த முயன்றுள்ளார். காதலியை மடக்கிப்பிடித்து கத்தியை பறித்தபோது ராகேஷின் விரலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தனது வாழக்கை வீணாகிபோனதாக கதறிய ராகேஷின் காதலி, தான் எடுத்து வந்த தூக்க மாத்திரைகளை எடுத்து மொத்தமாக விழுங்கியதாக கூறப்படுகின்றது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப்பெண்ணை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த ராக்கேஷ், தன் மீது ஆசிட் பட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளான்.

அடுத்தடுத்த கொலை முயற்சி, தற்கொலை முயற்சி என விபரீத செயலில் ஈடுபட்ட அந்தப்பெண் மீது 3 பிரிவுகளின் கீழும், அந்தப்பெண்ணை நம்பிக்கை மோசடி செய்ததாக காதலன் ராக்கேஷ் மீது 2 பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

இதற்கிடையே அந்தப்பெண்ணுக்கு நினைவு திரும்பியதும் போலீசாருக்கு தெரியாமல் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்று விட்டதாகவும், ராக்கேஷும் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி கேரளாவுக்கு சென்று விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருவர் மீதும் வழக்கு இருக்கும் நிலையில் கையில் சிக்கிய இருவருமே தப்பிச்சென்று விட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி போயுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments