ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட 46 சவரன் நகை... மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசார்!

0 4440

சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட 46 சவரன் நகைகளை மீட்ட ரயில்வே போலீசார், திருப்பி ஒப்படைத்தனர்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள குடும்பத்துடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் சென்றுள்ளார். ரயிலில் இருந்து இறங்கும் போது, ஒரு பையை தவறவிட்டதாகவும் அதில் 46 சவரன் நகைகள் இருந்ததாகவும், நாகர்கோவில் ரயில்வே போலீசாரிடம் அவர் புகாரளித்துள்ளார்.

அதற்கிடையில் அந்த ரயில் கன்னியாகுமரி சென்றடைந்த நிலையில், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்து ரயிலில் இருந்த நகைகளை மீட்ட நாகர்கோவில் ரயில்வே போலீசார், அதனை சரவணனிடம் ஒப்படைத்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments