ஆற்றுப்படுகையில் தங்க படிமங்கள் இருப்பதாக எழுந்த வதந்தி... குவிந்த சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள்

0 2949

பிரேசிலின் மடைய்ரா ஆற்றுப்படுகையில் தங்க படிமங்கள் இருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து, ஏராளமான சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள் மிதக்கும் அகழ்வு இயந்திரங்களை நதியின் குறுக்கே குவித்துள்ளன.

அமேசான் நதியின் பிரதான கிளை நதியான Madeira நதியின் குறுக்கே 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன.

2 வாரங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ள சுரங்க நிறுவனங்கள் தங்கம் உள்ளதா என ஆராய்ந்து வரும் நிலையில், இந்த சட்டவிரோத செயலுக்கு எதிராக அதிகாரிகள்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments