சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் படிபூஜை

0 2651

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 

சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக 75 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments