சென்னையில் 12 மணி நேரமாக விட்டுவிட்டு கனமழை!

0 3695

சென்னையில் 12 மணி நேரமாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அடையாறு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

நுங்கம்பாக்கம். வேளச்சேரி. தரமணி. கொட்டிவாக்கம். மயிலாப்பூர். மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கே.கே.நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம், தியாகராயநகர், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.

இரவு முழுவதும் பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்று அதிகாலையிலும் காற்றுடன் மழை நீடித்தது.

புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டன.

 

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிய கனமழையால் வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய மக்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

 

திருச்சியில் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் சுமார் இரண்டடி அளவிற்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன

 

மதுரையில் மாலை முதல் கொட்டிய மழையால் காமராஜர் சாலை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது. சுரங்கப்பாதையில் உள்ள நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments