தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் இருந்து பரவும் புதிய வகை கொரோனா குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை!

0 2389

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் இருந்து பரவும் புதிய வகை கொரோனா குறித்து மத்திய அரசு மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.வெளிநாட்டுப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு தேசிய நோய்த் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த மூன்று நாடுகள் மற்றும் நோய் பரவல் அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள சூழலில் இந்த கண்காணிப்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments