தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

0 8099

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், ஓரிரு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாகவும், அது தற்போதைய சூழலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், ஓரிரு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தமான் கடல் பகுதியில் வருகிற 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகான அடுத்த 48 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என வானிலைமையம் அறிவித்துள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments