போலி பணி நியமன ஆணையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞர் ; போலி பணி நியமன ஆணை அனுப்பியவருக்கு வலைவீச்சு

0 5325
போலி பணி நியமன ஆணையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த இளைஞர் ஒருவர், அலுவலக உதவியாளர் பணிக்கு வந்ததாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

செஞ்சி வட்டம், களையூர் காலனியை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பணி நியமன ஆணையுடன் வந்தார். அதனை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரிபார்த்த போது அது போலியான ஆணை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து நேர்முக உதவியாளர் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த ஏழுமலை என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி குமரேசனிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு போலி பணி நியமன ஆணையை வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏழுமலையை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments