போலந்துக்குள் ஊடுருவ முயலும் அகதிகளுக்கு பெலாரஸ் ராணுவத்தினர் உதவி

0 1827

பெலாரஸில் இருந்து போலந்துக்குள் ஊடுருவ முயலும் அகதிகளுக்கு உதவும் விதமாக பெலாரஸ் பாதுகாப்பு படையினர், போலந்து நாட்டு வீரர்களின் கண்களில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை அடிக்கும் வீடியோவை போலந்து வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக பெலாரஸ் வழியாகப் போலந்துக்குள் ஊடுருவும் அகதிகளுக்கு பெலாரஸ் ராணுவத்தினர் உதவுவதாக போலந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், செரெம்சா கிராமம் அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலந்து வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவர்கள் கண்களில் பெலாரஸ் வீரர்கள் லேசர் மற்றும் டார்ச் லைட்களை அடித்தனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு அகதிகள் ஊடுருவி விடுவதாகத் தெரிவித்த போலந்து வீரர்கள், அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments