கணவன் - மனைவி இடையேயான பிரச்சனையில் விஷ ஊசி போட்டு அரசு மருத்துவர் தற்கொலை..?

0 3686
சென்னையில் கணவன் - மனைவி இடையேயான குடும்ப பிரச்சனையால் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கணவன் - மனைவி இடையேயான குடும்ப பிரச்சனையால் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மகேஷ்வரன், நேற்று மாலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் ஆர்.கே.சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இறங்கிவிட்டு, காரை மட்டும் ஓட்டுநருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விடுதியில் அறை எடுத்து தங்கிய மகேஷ்வரன் காலையில் வெகு நேரமாக வெளியே வராத நிலையில், கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் மாற்று சாவியை பயன்டுத்தி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, மகேஷ்வரன் சடலமாக கிடந்துள்ளார். அருகிலேயே ஊசியுடன் இருந்த சிரஞ்சை கைப்பற்றிய போலீசார், அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments