மதம் மாறியவர்கள் கலப்புத் திருமணச் சான்று பெற தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

0 8928
மதம் மாறியவர்கள் கலப்புத் திருமணச் சான்று பெற தகுதியில்லை, என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறியவர்கள் கலப்புத் திருமணச் சான்று பெற தகுதியில்லை, என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த, கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை, திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர்,  தனக்கு கலப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கான சான்றிதழ், வழங்கக் கோரி மேட்டூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார்.

ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு, விசாரணைக்கு வந்தது. இதில், மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை, என குறிப்பிட்ட நீதிபதி, ஒரே சாதியையோ வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு, கலப்புத் திருமணச் சான்று பெற தகுதியில்லை, என கூறி, பால்ராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், மதம் மாறியவருக்கு இவ்வாறு சான்றிதழ் வழங்கினால், கலப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள், தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments