உத்தரப் பிரதேசத்தில் 10,050 கோடி ரூபாயில் புதிய விமான நிலையம்... அடிக்கல் நாட்டினார் பிரதமர்

0 2432
நொய்டா பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்போது, அது, வட இந்தியாவின் போக்குவரத்து நுழைவாயிலாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நொய்டா பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்போது, அது, வட இந்தியாவின் போக்குவரத்து நுழைவாயிலாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உத்தரப் பிரதேசத்தின் ஜீவர் என்னுமிடத்தில் நொய்டா பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தின் முதற்கட்டப் பணி பத்தாயிரத்து ஐம்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆயிரத்து முந்நூறு எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் இதன் முதற்கட்டப் பணி முடிவடைந்தால் ஆண்டுக்கு ஒரு கோடியே 20 இலட்சம் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றிருக்கும். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் கலந்துகொண்ட விழாவில், புதிய விமான நிலையம் கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, விமானங்களின் பழுதுபார்ப்பு, பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றில் இது மிகப்பெரிய மையமாக விளங்கும் எனத் தெரிவித்தார். 40 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள பழுதுபார்க்கும் பிரிவில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் வட இந்தியாவின் போக்குவரத்து நுழைவாயிலாக விளங்கும் என்றும், மிகப்பெரிய ஏற்றுமதி மையத்தைப் பன்னாட்டுச் சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும் என்றும் குறிப்பிட்டார். காய்கறிகள், பழங்கள், மீன் ஆகியவற்றையும், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பொருட்களையும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் எனத் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு என்பது நாட்டைக் கட்டமைப்பதற்காகத் தானேயொழிய அரசியலுக்காக அல்ல என்றும், குறித்த காலத்தில் உட்கட்டமைப்புத் திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments