சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து.. 5 பேர் படுகாயம்

0 4721

கிருஷ்ணகிரியில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது பின்னால் இருந்து வந்த கேரள அரசு சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

காவேரிப்பட்டணம் திம்மாபுரம் மேம்பாலத்தின் மீது அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பேருந்தின் முன்பக்க வலதுபுறம் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தில் பேருந்தின் கதவு சேதமானதால் அதை திறக்க முடியாமல் போனதாக கூறப்படும் நிலையில், பயணிகள் அனைவரும் அவசர கால வழியை பயன்படுத்தியும் கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர். இந்த விபத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments