பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கும்பல்.. போலீசாரை பார்த்ததும் பதற்றம்.. மின்னல் வேகத்தில் விரட்டி சென்று மடக்கிப் பிடித்த போலீஸார்..

0 2167
சென்னை தாம்பரத்தில் சைக்கிளில் ரோந்து சென்ற போலீஸார், பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கும்பலை கைது செய்தனர்.

சென்னை தாம்பரத்தில் சைக்கிளில் ரோந்து சென்ற போலீஸார், பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கும்பலை கைது செய்தனர்.

உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், தாம்பரம்  போலீசார், ஜிஎஸ்டி சாலையில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் வகையில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், போலீசாரை பார்த்ததும் பதற்றமடைந்து, அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

இதையடுத்து மின்னல் வேகத்தில், அவர்களை சைக்கிளில் விரட்டி சென்று, போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களில் ஒரு நபர், ஆடைக்குள் ஒன்றரை அடி நீளமுள்ள பட்டா கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழிப்பறி செய்யும் நோக்கத்துடன், அவர்கள் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்துரை, அலன்ராஜ், விஜய், கருப்பு லோகேஷ், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி மற்றும், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்களுடன் வந்தவர்களில், தப்பியோடிய ஓட்டேரியை சேர்ந்த டேவிட் என்பவரை, போலீஸார் தேடி வருகின்றனர். வழிப்பறி கும்பலை மடக்கி பிடித்த 7 போலீசாரையும், அதிகாரிகள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments