ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை கல்லால் தாக்கிய போதை ஆசாமிகள் கைது

0 2177
ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை கல்லால் தாக்கிய போதை ஆசாமிகள் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை கல்லால் தாக்கிய போதை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி கடற்கரையில் காவலர்கள் 3 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த 2 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கேமிராவை பறித்து கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்களிடமிருந்து கேமிராவை வாங்கி சுற்றுலா பயணிகளிடம், போலீசார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து குடிபோதையில் இருந்த இரண்டு நபர்களும் போலீசாரை கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த பரத் மற்றும் அவனது தம்பி மணிகண்டன் என்பது தெரியவந்தது. காயமடைந்த 3 போலீசாரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments