சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 1லட்சம் பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1832
ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகள் மாதாந்திரம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதற்கட்டமாக, 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

ஏற்கனவே, தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் மூலம் மொத்தமாக 33லட்சத்து 31ஆயிரத்து263 பயனாளிகள் பயனடைந்து வருவதாகவும், இதற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 4ஆயிரத்து807கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments