பட்டப்பகலில் நடுரோட்டில் கடுமையாக தாக்கப்பட்ட நபர்!

0 4308

ஆந்திராவில் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து, 4 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குண்டூர் மாவட்டம்  பிடுகுராலாவை சேர்ந்த சையான் என்பவர் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து கடுமையாக தாக்கிய 4 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த சையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு உள்ளான சையான் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் எனவும் அவரை தாக்கியவர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments