காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாது: தமிழகத்தில் கனமழை நீடிக்கும்!

0 25024

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், ஓரிரு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாகவும், அது தற்போதைய சூழலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், காற்றழுத்த வேறுபாடு குறைவு காரணமாக, காற்றின் உந்துதலும் குறைவாக இருந்ததால், அழுத்தம் ஏற்படாமல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், ஓரிரு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.

குமரிக்கடல், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இரு நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தமான் கடல் பகுதியில் வருகிற 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகான அடுத்த48 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments