இந்திய கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல் "வேலா" இணைப்பு.!

0 2139

இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 4-வது ஸ்கார்ப்பீன் ரக  நீர்மூழ்கிக் கப்பல் INS Vela இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது .

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தலைமை தளபதி Karambir Singh புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய அரசின் சுயசார்பு சித்தாந்தத்தின் அடிப்படையில் ப்ராஜக்ட்-75 என்ற திட்டத்தின் கீழ் ஸ்கார்ப்பீன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையைச் சேர்ந்த Kalvari, Khanderi, Karanj  ஆகிய மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படையில் INS Vela-வின் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments