பெண் புள்ளீங்கோ கூட இங்க பயங்கரம் ஓடும் ரெயிலில் சறுக்கல்..!

0 5714

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவியும், மாணவரும் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் சறுக்கி விளையாடும் விபரீத சாகச வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னையில் ரெயிலில் தொங்கிய படியே கத்திச்சண்டை போட்டு கம்பி எண்ணிய மகராசாக்களை பார்த்திருக்கிறோம்..!

ரெயில் நிலையத்திற்குள்ளேயே கல்வீசி மண்டையை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு சண்டை போட்ட மகான்களையும் பார்த்திருக்கிறோம்..!

சென்னையில் ஓடும் மாநகரப் பேருந்துக்கு வெளியே அட்டை போல ஒட்டிக் கொட்டும் , மந்தி போல தொற்றிக்கொண்டும் கெத்து காட்டும் விபரீதகர்களை அன்றாடம் பார்த்திருக்கிறோம்..!

இந்த வம்பர்களுக்கு இணையாக ஓடும் ரெயிலை பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் மின்னல் வேகத்தில் ஓடிவந்து, ரெயிலுக்குள் டக்கென்று தாவி, ஒற்றைக்காலை பிளாட்பாரத்தில் உரசியபடியே ஸ்கேட்டிங் செய்த படி வந்து. ஏரியா பசங்களுக்கு, இங்குள்ள பெண் புள்ளீங்கோக்கள் எந்த விதத்திலும் குறைவில்லை என்று உரக்க உணர்த்தியுள்ளார் இந்த மாஸ்க் அணிந்த ஸ்கேட்டிங் மகராணி..!

மாஸ்க் போட்ட மாணவியைப் பின் தொடர்ந்து முக்கா பேண்டுடன் ஓடிவரும் இந்த ஸ்கேட்டிங் மாணவனும் விபரீத சாகம் செய்திருப்பது கவரப்பேட்டை ரயில் நிலையத்தில்..!

ஓடும் ரெயிலை பிடித்தபடி இவர்கள் செய்யும் இந்த விபரீத ஸ்கேட்டிங் காட்சியை அருகில் நின்று வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, எங்கள் புள்ளீங்கோ எல்லாம் எப்போதும் பயங்கரம்..! என்பது போல வரைமுறையில்லாமல் இணையத்தில் வைரலாகி வருகின்றது

முன்பு கல்லூரி செல்லும் மாணவர்கள் தான் இது போன்ற சர்க்கஸ் சாகசங்களை எல்லாம் செய்து வந்தனர். அவர்களில் பலர் போலீசாரின் கைது நடவடிக்கைகளால் சிறகொடிந்த பறவைகளாகி முடங்கிப்போன நிலையில், அரசின் சலுகையால் எல்லாம் இலவசம் என்று அனுபவித்து வரும், பள்ளிச்சீருடை அணிந்த சின்னஞ்சிறுசுகள் தற்போது இந்த விபரீத ஸ்கேட்டிங் விளையாட்டில் பாதம் பதித்திருப்பதாக கூறப்படுகின்றது

இவர்களை போல ஆள் ஆளுக்கு ஸ்கேட்டிங் செய்யாமல் தடுக்கப்பட வேண்டு மென்றால், ரெயில்வே காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவனையும் , மாணவியையும் அழைத்து இவ்வாறு சர்க்கஸ் சாகசம் புரிந்தால் சட்டம் என்ன செய்யும் ? என்பதை புத்திக்கு எட்டும் படி உணர்த்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments