தமிழகம் முழுவதும் இன்று 11-வது மெகா தடுப்பூசி முகாம்...

0 1399

தமிழ்நாடு முழுவதும் 11-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக 50 ஆயிரம் மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

மெகா தடுப்பூசி முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்கள் தாமதப்படுத்தக் கூடாது என்றும் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 2-வது டோசை குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 76 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments