இந்தியா - நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்!

0 2440

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் கான்பூரில் இன்று தொடங்குகிறது.

டி20 தொடரை முழுவதுமாக இழந்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்ல நிச்சயம் முயற்சிக்கும். கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பி இருப்பது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

அதேநேரம் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, முகமது ஷமி என ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய வீரர்கள் இல்லாமல், ரஹானே தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments