பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை, இருவர் கைது

0 3239

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் அரிவாளோடு அவரை துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செல்சீனி காலனியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற அந்த ஆட்டோ ஓட்டுநரை நேற்று இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவும் கார்த்திக் என்பவனும் பார்த்தசாரதியை ஆயுதங்களுடன் துரத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

மாரிமுத்துவின் மனைவி லட்சுமிக்கு பால்ராஜ் என்பவனும் தவறான தொடர்பு ஏற்பட்டு, தலைமறைவாகியுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பார்த்தசாரதி உடந்தையாக இருந்ததாக கேள்விப்பட்டு, மாரிமுத்து கோபத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று மாரிமுத்துவும் அவனது நண்பன் கார்த்திக்கும் அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்தச் சென்றபோது, அங்கு ஏற்கனவே குடித்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி மாரிமுத்துவைப் பார்த்து ஏளனமாக சிரித்ததாகவும் அந்த ஆத்திரத்தில் அவனை விரட்டிச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments