காலில் ஏற்பட்ட புண்ணுக்கு "மனச்சிதைவு" நோய்க்கான மாத்திரை: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீது புகார்

0 2178

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் காலில் ஏற்பட்ட புண்ணுக்கு மனச்சிதைவு நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரையை கொடுத்துவிட்டதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், காலில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற கடந்த 17ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளார்.

புண் ஆறுவதற்காக காலை, இரவு என இருவேளைக்கு 4 நாட்களுக்கான மாத்திரைகள் கொடுத்துள்ளனர். அதனை வேளை தவறாது சாப்பிட்டு வந்த மணிகண்டன், கடந்த 21ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு கொடுக்கப்பட்ட ‛ஹாலேபெரிடல்’  மாத்திரை மனச்சிதைவு நோய்க்கு கொடுக்கப்படுவது என்று கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீது மாவட்ட சுகாதாரத்துறையிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து துணை இயக்குனர் குமரகுருபரனிடம் கேட்ட போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments